Sorting by

×

`காகிதத்தில் மட்டுமே முதலீடு; பெண்கள் பாதுகாப்பு புறக்கணிப்பு’ ஆளுநர் வெளியேறியது ஏன்? | முழு விவரம்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற மூன்று ஆண்டுகளில், இதுவரை ஒரு ஆண்டு கூட, அவர் ஆளுநர் உரையை முழுமையாகப் படித்ததில்லை. இதனால் இந்த முறையும் ஆளுநர் உரை மீது எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, […]

‘பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2

கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்த்தால் செம ரகளையாக இருக்கும். அதற்காகவே ஸ்பெசலாக வருகிறது ‘கூட்டணி சர்க்கஸ்’ – கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்!’ வைகோ‘கூட்டணி சர்க்கஸ்’ – பகுதி 02 ‘கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை […]

‘மைக் off செய்யப்பட்டது; பேச அனுமதிக்கவில்லை’ – ஆளுநர் மாளிகை| சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026 LIVE

ஆளுநர் மாளிகை என்ன சொல்கிறது? ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து ஆளுநர் மாளிகை கூறியுள்ளதாவது…. “ஆளுநரின் மைக் தொடர்ந்து ஆஃப் செய்யப்பட்டது. அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன”. Reasons why Governor declined reading the Govt speech in the Assembly: 1- Governor’s Mike was repeatedly switched off and he was not allowed to speak; 2- The speech contains […]

டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?

இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், தேனி மாவட்டம் சேர்ந்த பளியர் பழங்குடியினத் தலைவர் கண்ணன் மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோரை விவிஜபி பிரிவின் கீழ் முதன்மை சிறப்பு அழைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 25 ஆண்டு கால சமூக பணி பெரியகுளம் அருகே உள்ள சொக்கன் அலை […]

காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் ‘அமைதி வாரியம்’; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக உயர்மட்ட ‘அமைதி வாரியம் – Board Of Peace’ என்ற ஒரு அமைப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்த அமைதி வாரியம் மூன்று கட்டமைப்புகளாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1. நிதி திரட்டுதல், முதலீடு, பிராந்திய உறவுகளைக் கவனிக்கும் பொருப்பை அதிபர் ட்ரம்ப் […]

“எனக்கு நோபல் பரிசு தரவில்லை… அதனால் ‘அமைதி’ பேச்சுக்கே இடமில்லை” – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!

டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா […]

TVK Vijay: “கிளி ஜோசியம்போல வதந்திகளைப் பரப்புகிறார்கள்” – சி.டி.ஆர்.நிர்மல் குமார்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 போ்பரிதாபமாக பலியானார்கள். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரித்து வருகின்றது. கரூரில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்ட நிலையில், தற்போது டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். தவெக விஜய் அதன் அடிப்படையில், த.வெ.க நிர்வாகிகளைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் […]

ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள ‘சம்பவங்கள்’ என்னென்ன? |In Depth

டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த ‘சம்பவ’ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’. வெளியேற்றம் ட்ரம்பிற்கே tariff-ஆ? – தனித்துவிடப்படுமா அமெரிக்கா? – ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! “அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் […]

குடிநீர் vs பல்லுயிர்: `மாமல்லன் நீர் தேக்கத்தின் இரு முகங்கள்’- உப்பங்கழியைப் பலி கொடுக்கிறதா அரசு?

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்த நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில் 342 கோடி ரூபாய் செலவில் புதிதாக மாமல்லன் நீர்த்தேக்கம் அமைகிறது. 4,375 ஏக்கர் பரப்பளவில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கம் சென்னையின் 6-வது நீர்த்தேக்கமாகும். இந்த நீர்தேக்கம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றச் செய்தி வந்தவுடன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “நாளை முதல்வர் அடிக்கல் நாட்டப் போகும் “மாமல்லன் நீர்த்தேக்கம்” , […]