Sorting by

×

‘பல சிரமங்களை இதுவரை சகித்துக்கொண்டிருந்தேன்’ – பா.ஜ.க-வில் இணைந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜேந்திரன். கடந்த முறை அந்த தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சி.பி.எம் சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் இம்மாதம் தொடக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார். இதை அடுத்து அவர் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் […]

இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்… மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் இந்நிலையில் கடந்த மாதம் […]

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! – கவனிப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது […]

‘மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்’ – மனோ தங்கராஜ்

பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு  நினைவு தினத்தை ஒட்டி  நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள  திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைத்திலும் அனைவரும் சமம் என்ற ஒப்பற்ற சமத்துவக் கோட்பாட்டை இந்தியாவில் ஏற்படுத்தியாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, பொதுவுடைமைச் […]

‘விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!’ – கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. படுக்கைவசதியுடன் கூடிய […]

`2.5 ஆண்டுக்காலம் மேயர் பதவி வேண்டும்’- ஹோட்டலில் கவுன்சிலர்கள்… பாஜக-விடம் பேரம் பேசும் ஷிண்டே!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தனித்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மேயர் பதவியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 89 வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. மேயர் தேர்தலில் வெற்றி பெற 114 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாகும். ஆனால் அந்த அளவுக்கு பா.ஜ.கவிடம் கவுன்சிலர்கள் இல்லை. இதையடுத்து கூட்டணி கட்சியான சிவசேனா(ஷிண்டே)வின் ஆதரவை பெற வேண்டிய […]

“எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது” – ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த […]

ஈரோடு: எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா; குதிரை சாரட் ஊர்வலம்… மேள தாளத்துடன் உற்சாகம்! – Album

ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் ஈரோடு எம்.ஜி.ஆர் 109-வது […]

SIR: இன்றே கடைசி நாள்… வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் பெயர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என சுமார் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் இறந்​தவர்​கள் 26.94 லட்​சம் பேர், முகவரி​யில்இல்​லாதவர்​கள் 66.44 லட்​சம்பேர், ஒன்​றுக்கு மேற்​பட்ட இடங்​களில் வாக்​குரிமை உள்​ளவர்​கள் 3.98 […]