கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷி ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகாப்டர் ஒன்று வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள தளத்திலிருந்து புறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்ட சில மணி நேரங்களில் விமானியிடம் இருந்து தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டரில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் இருந்ததாகவும், ஹெலிகாப்டர் கிழக்கு கட்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாகவும் மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.
ரஷிய ஹெலிகாப்டர் காணாமல் போன பகுதியில் தூறல் மற்றும் பனிமூட்டம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை தேட மற்றொரு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 12-ம் தேதி 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகாப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

