சென்னை: சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட 3 வந்தே பாரத் ரயில் ரயில் சேவைகளை பிரதமர் மோடி சனிக்கிழமை (ஆக.31) தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பேசினார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் ஓடும் வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்- லக்னோ இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி புதுடெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இவற்றில் ஒரு ரயிலான சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையின் தொடக்க விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

