
சென்னை: தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9 கோடியே 65 லட்சத்தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


