Sorting by

×

4 நாள் ஏற்றத்திற்கு பிறகு சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தொடர்ந்து நான்கு நாள் ஏற்றத்திற்குப் பிறகு, முக்கியமாக வங்கிப் பங்குகளில் லாபம் ஈட்டுதல் அதிகரிப்பால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 576.77 புள்ளிகள் சரிந்து 83,482.13 ஆக இருந்தது. வர்த்தகம் தொடர தொடர, நாள் முழுவதும் சரிந்த நிலையில் இருந்த பிஎஸ்இ குறியீடுகளான சென்செக்ஸ் 452.44 புள்ளிகள் சரிந்து 83,606.46 ஆகவும் நிஃப்டி 120.75 புள்ளிகள் சரிந்து 25,517.05 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸ் நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் நிதி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிந்து முடிந்த நிலையில் டிரென்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் டாடா நுகர்வோர், ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசுகி ஆகியவை சரிந்த நிலையில் டிரென்ட், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஜியோ பைனான்சியல் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.6 சதவிகிதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.8 சதவிகிதமும் உயர்ந்தது முடிந்தன.

கடந்த நான்கு நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,162.11 புள்ளிகள் அதாவது 2.64 சதவிகிதம் உயர்ந்தது. அதே வேளையில் நிஃப்டி 665.9 புள்ளிகள் அதாவது 2.66 சதவிகிதம் உயர்ந்து முடிவடைந்தன.

இன்றைய அமர்வில் நிஃப்டி வங்கி குறியீடு புதிய சாதனை அளவான 57,614.50 ஐ எட்டிய நிலையில், மீண்டும் 0.2 சதவிகிதம் சரிந்து 57,312.75 புள்ளிகளாகவும் ரியல் எஸ்டேட், எஃப்எம்சிஜி, ஆட்டோ, மெட்டல் ஆகியவை சரிந்து முடிந்தன.

தெலுங்கானாவில் உலை வெடிப்பு காரணமாக சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 11% சரிவுடன் வர்த்தகமான நிலையில் டாக்ஸோரூபிகின் ஹைட்ரோகுளோரைடு ஊசிக்கு யுஎஸ்எஃப்டிஏ ஒப்புதல் அளித்ததால் அலெம்பிக் பார்மா பங்குகள் 5% உயர்ந்தன.

நிதி ஏலக் கட்டத்தை நெருங்கி வருவதால் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் 1% உயர்ந்தன. அதே நேரத்தில் டோரண்ட் பார்மா ரூ.25,689 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதால் ஜேபி கெமிக்கல்ஸ் பங்குகள் 6% சரிந்தன.

540 மெகாவாட் சோலார் பேணல் ஆர்டரை வென்ற பிறகு வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% உயர்ந்தன.

எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமாவை தொடர்ந்து கர்நாடகா வங்கியின் பங்குகள் 5 சதவிகிதம் சரிந்து முடிவடைந்தன.

தீபக் உரங்கள், சிட்டி யூனியன் வங்கி, ஈஐடி பாரி, லாரஸ் லேப்ஸ், ஆதித்யா பிர்லா கேபிடல், லாயிட்ஸ் மெட்டல்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், எஸ்ஆர்எஃப், பூனவல்லா ஃபின்கார்ப், அபோட் இந்தியா, ராம்கோ சிமென்ட்ஸ், எல்டி ஃபைனான்ஸ், ரெடிங்டன், ஜில்லெட் இந்தியா, ஹூண்டாய் மோட்டார், எச்டிஎஃப்சி லைஃப், மேக்ஸ் ஃபைனான்சியல், சோலார் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தைத் பதிவு செய்தது.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட தளர்வு மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மீதான நம்பிக்கைகள் காரணமாக, உலகளாவிய போக்கு பங்குச் சந்தையை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது. இந்த போக்கை முன்னிட்டு முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் காலாண்டு வருவாயில் தங்கள் கவனத்தையும் திருப்பியுள்ளனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் ஹாங்காங்கின் ஹேங் செங் சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிந்தே இருந்தன.

அமெரிக்க சந்தைகள் கடந்த வராம் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) தேதியன்று உயர்ந்து முடிவடைந்தன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,397.02 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.15 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 67.67 அமெரிக்க டாலராக உள்ளது.

இதையும் படிக்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆனந்த் அம்பானி நியமனம்!

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *