பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று(ஜூன் 30) முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
கடைசியாக கடந்த பிப்ரவரை 25-ஆம் தேதி ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆட்சியமைத்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி வானொலி மூலம் இன்று முதல் மீண்டும் ஒலிபரப்பப்படுகிறது. ’மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அகில இந்திய வானொலி, ’நமோ’ செயலி, தூர்தர்ஷன் ஆகியவற்றில் இன்று காலை 11 மணி முதல் நேரலையில் பிரதமரின் உரையை கேட்கலாம்.
’மனதின் குரல்’ நிகழ்ச்சி நேரலை
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

