
சென்னை: பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது.
தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல்வேறு பகுதிகளுக்கு மின்வாரியம் எடுத்துச் செல்கிறது. ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ. வங்கி உதவியுடன் பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


