
மேட்டூர்: மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளவான 120 அடியை எட்டியதையடுத்து, இன்று மாலை 6 மணி முதல் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 32,000 கன அடி உபரிநீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகவில் உள்ள அணைகள் நிரம்பியது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரகாலமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 6,339 கன அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் உரிய நாளான ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ம் தேதி 92வது முறையாக தண்ணீர் திறக்கப்பட்டது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


