மதுரை திருப்பாலையில் நடந்த தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்ட தேமுதிக இளைஞரணி மாநிலச் செயலாளர் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி 9-ஆம் தேதி எங்கள் நிலைப்பாட்டை சொல்கிறோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெளிவாக கூறியுள்ளார்.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் கூறியுள்ளது போல தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எங்கள் கட்சியின் வலுவை நிரூபிக்க உள்ளோம்.
2011-ல் கேப்டன் தலைமையில் 29 சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி கோட்டைக்கு சென்றார்களோ, அதேபோல பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பலர் கோட்டைக்கு செல்வதுதான் எங்களின் ஆசை, அதற்காக நான் பாடுபட்டு வருகிறேன்.

தேமுதிக-வை சங்கடப்படுத்த எந்தக் கட்சியாலும் முடியாது. திமுக, அதிமுகவோடு கூட்டணி வைப்பதற்கு எங்களுக்கு எந்த சங்கடமும் கிடையாது. கேப்டன் ஆரம்பித்த கட்சி தோற்கக்கூடாது. யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறுவோம் என்றுதான் முடிவு எடுத்துள்ளோம்.
கலைஞர் ஐயாதான் கேப்டனுக்கு திருமணம் செய்து வைத்தார், அதன் பிறகு அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது.
ஜனவரி 9 ஆம் தேதி 2026 தேர்தல் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார். 2026 இல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும். தமிழ்நாடு என்பது திராவிட நாடு திராவிடக் கொள்கைகள் கொண்ட கட்சிகளால் கூட்டணி ஆட்சி அமையும் அதற்கான சாத்தியம் இருக்கிறது” என்று பேசினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN


