Sorting by

×

Hamas தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் உயிரிழப்பு… உறுதிப்படுத்திய ஹமாஸ்!

கடந்த ஒரு வருடமாக இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் 39,400 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயும், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் ஈரானில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றிருந்தார்.

இஸ்மாயில் ஹனியே

செவ்வாய்க்கிழமை காலை தெஹ்ரானில் உள்ள தலைமையகத்தில் இஸ்மாயில் ஹனியேவின் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது, அவரின் இல்லம் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும், இதில் இஸ்மாயில் ஹனியேயும், அவரின் மெய் காப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்திருக்கிறது. தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்களை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

1993 வரை நீடித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரால் ஈர்க்கப்பட்ட இஸ்மாயில் ஹனியே, 1987-ல் ஹமாஸில் சேர்ந்தார். 2017- ல் கலீத் மெஷாலுக்குப் பின் ஹமாஸ் குழுவின் அரசியல் தலைவராக இஸ்மாயில் ஹனியே தேர்ந்தெடுக்கப்பட்டார். போர் காரணமாக நாடுகடத்தப்பட்டு துருக்கிக்கும் கத்தாருக்கும் இடையில் தனது நேரத்தை செலவிட்டு ஆலோசனைகளை வழங்கிவந்தார்.

இஸ்மாயில் ஹனியே

தற்போதைய இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது ஈரான் மற்றும் துருக்கிக்கு பயணம் செய்து இராஜதந்திர நடவடிக்கையாக துருக்கி, ஈரான் ஜனாதிபதிகளை சந்தித்தார். ஹமாஸின் போட்டியாளர்கள் உட்பட பல்வேறு பாலஸ்தீனப் பிரிவுகளின் தலைவர்களுடன் இஸ்மாயில் ஹனியே நல்லுறவைப் பேணியதாக கூறப்படுகிறது. இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்கு இஸ்ரேலிய ராணுவம் இதுவரை எந்தபதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

“இஸ்ரேல் மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது..!” – கமலா ஹாரிஸ்

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *