Sorting by

×

Nepal: ரூ.100 தாளில் சர்ச்சைக்குரிய வரைபடம் – இந்திய பகுதிகளை உரிமைகோருகிறதா நேபாளம்?

நேபாளம் நாட்டின் மத்திய வங்கியான நேபாள ராஷ்டிர வங்கி, புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேற்று முந்தினம் (நவ. 27) வெளியிட்டுள்ளது. இதில் அச்சிடப்பட்டுள்ள அந்த நாட்டின் ‘திருத்தப்பட்ட’ வரைபடத்தில் காலாபாணி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்திய – நேபாள எல்லை

இந்த பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய-நேபாள எல்லை என்பது 1816ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனி ஆதிக்க ஆட்சியாளர்கள் மற்றும் நேபாள ராஜ்ஜியம் இடையே போடப்பட்ட சுகௌலி (Sugauli) ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டது.

Nepal 100 Rupees Note
Nepal 100 Rupees Currency

நேபாளம், இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுடன் 1850 கி.மீ-க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டால் மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் தாள்கள் 2024ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருக்கின்றன. 2020-ஆம் ஆண்டு மே மாதம், கே.பி. சர்மா ஒலி தலைமையிலான நேபாள அரசு, லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை நேபாளத்தின் எல்லைப் பகுதியாகக் காட்டும் ஒரு புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. பின்னர், இது நேபாள நாடாளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட்டது. அப்போது முதலே இந்த சர்ச்சை தொடர்வது குறிப்பிடத்தக்கது.

அப்போது நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. திருத்தப்பட்ட அந்த வரைபடத்தை கண்டித்ததுடன், பிராந்திய எல்லைகளை ‘செயற்கையாக விரிவாக்குவது’ ஏற்கப்படாது என்றும் காத்மாண்டுவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்திய-நேபாள எல்லையின் ஒரு பகுதி காளி நதியில் குறிக்கப்பட்டுள்ளது. அந்த நதியின் மூலமான லிபுலேக், காலாபாணி மற்றும் லிம்பியாதுரா பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்துக்குச் சொந்தமானவை என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Nepal Rs 100 Currency

புதிய வரைபடப் பதிப்பு குறித்துப் பேசிய நேபாள ராஷ்டிர வங்கியின் செய்தித் தொடர்பாளர், ஏற்கனவே பழைய 100 ரூபாய் பணத்தாளில் நாட்டின் வரைபடம் இருந்தது என்றும், அரசின் முடிவின்படி அது திருத்தப்பட்டுள்ளது என்றும் (வியாழக்கிழமை) விளக்கம் அளித்துள்ளார்.

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் எவரெஸ்ட் சிகரம் இடம்பெற்றுள்ளது. வலது பக்கத்தில், நேபாளத்தின் தேசிய மலரான ‘ரோடோடென்ட்ரான்’ மலரின் குறியீடு (Watermark) உள்ளது. மையப் பகுதியில் மங்கலான பச்சை நிறத்தில் நேபாளத்தின் வரைபடம் பின்னணியில் அச்சிடப்பட்டுள்ளது. அந்த வரைபடத்திற்கு அருகில் அசோகத் தூண் சின்னமும், “புத்தர் பிறந்த இடம், லும்பினி” என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.

நோட்டின் பின்பக்கத்தில் ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகத்தின் படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், விழி சவால் மாற்று திறனாளிகள் கண்டறியும் வகையில், நோட்டில் ஒரு பாதுகாப்பு இழை மற்றும் புடைப்பான கருப்புப் புள்ளியும் உள்ளது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *