Sorting by

×

PMK: “அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்…” – பாமக MLA அருள் சொல்வதென்ன?

பாமக கட்சியில் நடைபெற்றுவரும் தந்தை மகன் பூசலுக்கு மத்தியில் தேர்தல் கூட்டணி அமைப்பது பற்றிய நெருக்கடிகள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் கடந்த வாரம் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருளுக்கு மாநில அளவிலான இணைப் பொதுச்செயளாலர் பதவியை வழங்கினார் ராமதாஸ். அன்றைய தினமே அருள் வகித்துவந்த மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை அமர்த்தினார்.

“ஐயா (ராமதாஸ்) மட்டுமே பதவி கொடுக்கவும், பறிக்கவும் முடியும்” என அருள் பேசிவரும் சூழலில், தானே கட்சியின் தலைவர் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் அன்புமணி ராமதாஸ்.

ராமதாஸ்
ராமதாஸ்

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அருள் ராமதாஸ் தலைமையில் கூட்டணி அமையும் எனப் பேசியிருக்கிறார்.

“‘தமிழ்நாடு மக்கள், பாமக தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும். நான் அமைக்கும் கூட்டணியை அறிந்த உடன் வயதானவர்கள் கூட துள்ளி குதிப்பார்கள்.’ என ஐயா (ராமதாஸ்) என்னிடம் கூறினார்.

கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரமும் ஐயாவுக்குதான் இருக்கிறது. கலைஞர், ஜெயலலிதா காலம் முதல் 2024ல் பாஜக-வுடன் அமைக்கப்பட்ட கூட்டணி வரை எல்லா கூட்டணிக்கும் ஐயாதான் கையொப்பமிட்டுள்ளார்.” என்றார்.

ராமதாஸ், அன்புமணி

அன்புமணி அமித் ஷாவால் இயக்கப்படுகிறார் எனப் பரவும் கருத்துகள் பற்றி பதிலளிக்காமல் கடந்தார் அருள்.

மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படுமா எனக் கேட்டபோது, “நிச்சயமாக. அவர் இல்லாமல் எப்படி மாநாடு நடத்துவோம். எங்களுக்கு எதிர்காலம் அவர்தான் (அன்புமணி). ஆனால் நிகழ்காலத்தை கடந்துதான் (எதிர்காலத்துக்கு) செல்ல வேண்டும். எதிர்காலமும் முக்கியம் நிகழ்காலமும் முக்கியம்.” எனப் பதிலளித்தார் அருள்.

மேலும் அன்புமணி தனது பதவியை பறித்தது குறித்து, “ஒரு காவல் அதிகாரி உயர் பதவிக்கு செல்லும்போது அவரது காலி இடத்துக்கு மற்றொருவர் அமரவைக்கப்படுவது வழக்கம்தானே” எனக் கூறியுள்ளார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *