Sorting by

×

Udhayanidhi: “என்னைச் சந்தித்து வாழ்த்த வரும் உடன்பிறப்புகளே…” – கட்சியினருக்கு உதயநிதி வேண்டுகோள்

‘தி.மு.க’ 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளுக்குள் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனக் கடகடவென வளர்ந்து துணை முதலமைச்சராகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

2019-ம் ஆண்டு தி.மு.க., இளைஞரணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டு, 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று சட்டமன்றத்திற்குச் சென்றார். பிறகு, 2022 ஆம் ஆண்டு ‘இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை’ அமைச்சராக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீப நாள்களாக, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்ற பரபரப்பைக் கிளப்பிவிட்டனர். இது குறித்து அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விவாதப் பொருளாக்கினர்.

உதயநிதி – UdhayanidhiUdhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக’வின் பவளவிழா மாநாட்டில் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தி.மு.க.,. அதன்படி, அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, நேற்று உதயநிதியைத் துணை முதலமைச்சராவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாவட்டந்தோறும் இருக்கும் தி.மு.க., தொண்டர்கள் சென்னை வந்து உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வாழ்த்துத் தெரிவிக்கச் சென்னை வரும் தி.மு.க., தொண்டர்கள் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச்…

— Udhay (@Udhaystalin) September 30, 2024

எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *