Sorting by

×

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் உதயநிதி தலைமையில் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, “தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் அனைவருக்குமான நலத் திட்டங்களை தி.மு.க அரசுதான் கொண்டு வந்திருக்கிறது.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்

இந்த நலத் திட்டங்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. மக்களுக்கான சேவைகளைச் செய்வதில் தலைவர் ஸ்டாலின்தான் அனைவருக்கும் ரோல் மாடலாக இருக்கிறார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் மக்களிடையே நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியாக இருக்கிறது.

வரவிருக்கும் தேர்தல் வெற்றி தி.மு.க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை வெற்றியாக அமைய இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி போன்ற அடிமைகளைப் பிடித்து எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் நுழையலாம் என மோடியும் அமித்ஷாவும் பகல் கனவு காண்கிறார்கள். அவர்களின் திட்டம் வடநாட்டில் எடுபடலாம். ஒருபோதும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்களின் இந்தக் கனவு பலிக்காது.

ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்
ஈரோட்டில் உதயநிதி ஸ்டாலின்

பத்து தோல்வி பழனிசாமி இந்தத் தேர்தலில் படுதோல்வி பழனிசாமியாகப் போகிறார். தமிழ்நாட்டில் பா.ஜ.க- வின் ஏ.பி.சி ஆகிய டீம்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டின் சேம்பியனாக தி.மு.க- வும் முதல்வர் ஸ்டாலினும்தான் இருப்பார்கள்” எனக் கொதித்திருக்கிறார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *