மன்னார் வளைகுடா மற்றம் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (மே 17) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
நேற்று(மே 16) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 17, 2024
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
