Sorting by

×

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1956-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரறிஞர் அண்ணா பேசிய பேச்சுக்கு முத்துராமலிங்க தேவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரித்ததாகவும், பின்னர் அண்ணா பயந்து மன்னிப்பு கேட்டதாகவும் பேசியிருந்தார். இதற்கு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளிடமிருந்து ஒருபக்கம் எதிர்ப்புகள் வர, மறுபக்கம் அண்ணாமலை கூறியதுபோல 1956-ல் எதுவும் நடக்கவில்லை என ஊடகங்கள் உண்மை சரிபார்ப்பு செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்டன.

அண்ணாமலை

அதைத்தொடர்ந்து, சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் என்பவர், அண்ணாமலை தொடர்ச்சியாகப் பொய்யான தகவலைப் பரப்பி வெறுப்புணர்வு மற்றும் மோதலைத் தூண்டும் வகையில் பேசிவருவதாகவும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் கூறி, அதற்கான ஆதாரங்களோடு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இப்படியிருக்க, அண்ணாமலை மீது வழக்கு பதிவுசெய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அதன்படி அவர்மீது வழக்கு பதிவுசெய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருப்பதாகவும் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் பெயரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 25.04.2024 தேதியிட்ட அறிக்கை வெளியாகியிருந்தது.

In the last 3 years, the draconian DMK Govt has filed plenty of cases against me & our BJP Karyakarthas for speaking the truth & has recently issued a sanction to prosecute me yet again.

Issue sanctions to prosecute for recalling an event in the past & awarding plum party… pic.twitter.com/jfuDHXSdXH

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 12, 2024

அதைத்தொடர்ந்து அண்ணாமலை நேற்று தனது X சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அறிக்கையை ஷேர் செய்து, உண்மையைப் பேசியதற்காக வழக்கு போடுகிறார்கள் என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் தான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலை வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆளுநர் மாளிகை விளக்கம்

அந்த அறிக்கையில், “அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்கு பதிவுசெய்ய ஆளுநர் அனுமதி அளித்திருப்பதாகப் பரவிவரும் செய்தி குறித்து ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாள்களாகப் பொதுமக்களிடமிருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து ஆளுநர் மாளிகை எந்தவொரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அதுதொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர்..!’ – கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்; சலசலப்பில் பாஜக முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *