நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா தன் 44-வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்தது.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
கமலுக்கு இடமில்லை..! சர்ச்சையில் ஸ்டார்!
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஊட்டி மற்றும் சில இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் தகவல்.