ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.
தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.
இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!
தெலுங்கில் அனிருத் 2017இல் இசையமைக்க ஆரம்பித்தார். 2018இல் யு டர்ன், ஜெர்ஸி ஆகிய படங்களுக்கும் 2019இல் கேங்க் லீடர் படத்திற்கும் இசையமைத்தார். இதனைத் தொடர்ந்து 2023இல் ஜுனியர் என்டிஆர்-இன் தேவரா படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் மே-19ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!
