முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.
அடுத்து ராஜ்ய சபா உறுப்பினராக தேசிய அரசியலில் என்ட்ரி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார் அவர். அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.
இந்த வாரத்தில் நிதிஷ் குமாரின் ராஜினாமாவை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் முறையாக ஜனதா தளத்தில் இணைந்துள்ளார்.
1985-ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் இருந்து வருகிறார் நிதிஷ் குமார். ஆனால், இது நாள் வரை தனது குடும்பத்தை அரசியலில் இருந்து தள்ளியே வைத்திருந்தார்.
தந்தையின் முதலமைச்சர் பதவி ராஜினாமா அறிவிப்பிற்கு பிறகு, நிதிஷ் குமாரின் மகன் கட்சியில் இணைந்துள்ளார். நிஷாந்த் குமாருக்கு வயது 40.
நிதிஷ் குமாரின் ராஜினாமாவிற்கு பிறகு, அமையப் போகும் அமைச்சரவையில் நிஷாந்த் குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
