Sorting by

×

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீனில் வெளிவந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், `பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித் ஷா தான் பிரதமராக்கப்படுவார். அவருக்காகத் தான் மோடி வாக்கு சேகரிக்கிறார்’ எனப் பற்றவைத்தார். மேலும், அதற்கான காரணத்தையும் விளக்கிய கெஜ்ரிவால், `பா.ஜ.க-வில் 75 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை மோடிதான் கொண்டுவந்தார்.

அமித் ஷா, கெஜ்ரிவால்

அதன்படி எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்டனர். அடுத்தபடியாக, 2025 செப்டம்பர் 17-ல் மோடிக்கு 75 வயதாகும். அப்படியானால் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமித் ஷா தான் பிரதமர். யோகி ஆதித்யநாத்தையும் ஓரங்கட்டுவார்கள்’ என்றார். ஆனால், இதனை மறுத்த அமித் ஷா, பா.ஜ.க-வில் அப்படி ஒரு விதியே இல்லையென்றும், வரும் காலங்களில் மோடியே இந்தியாவை வழிநடத்துவார் என்றும் கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க-வில் அமித் ஷாவுக்கு இருக்கும் ஒரே சவால் யோகி ஆதித்யநாத் மட்டுமே என்று கெஜ்ரிவால் தற்போது கூறியிருகிறார். முன்னதாக, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கெஜ்ரிவால் உத்தரப்பிரதேசத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

கெஜ்ரிவால் – அகிலேஷ் யாதவ்

அப்போது, 75 வயதில் ஒய்வு என்ற தனது விதியை மோடி உடைக்க மாட்டார் என்று ஒட்டுமொத்த நாடும் நம்புவதாகக் கூறிய கெஜ்ரிவால், “அமித் ஷா பிரதமராவதற்கான களம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை, சிவராஜ் சிங் சவுகான், ராமன் சிங், வசுந்தரா ராஜே, மனோகர் லால் கட்டார், தேவேந்திர ஃபட்னாவிஸ் என அவருக்கு இருக்கும் ஒவ்வொரு சவாலையும் பா.ஜ.க ஓரங்கட்டிவிட்டது.

அமித் ஷா- யோகி – மோடி

இப்போது அவருக்கு இருக்கும் ஒரே சவால் யோகி ஆதித்யநாத் மட்டுமே. அவரும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஓரங்கட்டப்படுவர். அது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், யோகி ஆத்தியநாத் குறித்து நான் கூறியிருப்பதை பா.ஜ.க தலைவர்களில் ஒருவர்கூட எதிர்க்கவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *