Sorting by

×

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போர் நிறுத்தத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் போலும்.

இந்தப் போர் நிறுத்தத்தால் என்னென்ன நன்மைகள் என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

“உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள்! ஈரானும் இதை விரும்புகிறது; அனைவரையும் போல, ஈரானுக்கும் போதும் என்றாகிவிட்டது.

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமெரிக்கா உதவும். ஏகப்பட்ட பாசிட்டிவ் விஷயங்கள் நடக்க உள்ளன. பெரிய பணம் சம்பாதிக்கப்படும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஈரான் தன்னுடைய மறுகட்டமைப்புப் பணிகளைத் தொடங்கலாம். எங்களுக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கிவிட்டு, அங்கு அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்ய அங்கேயே இருப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய அனுபவம் போல, இது மத்திய கிழக்கிற்கு பொற்காலமாக இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் மகிழ்ச்சி… ஈரான் போர் நிறுத்தம் தொடருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *