ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து இன்று தாக்குதலை நடந்தி இருக்கின்றனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த அதிபர் ட்ரம்ப், ” ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருக்கிறோம்.

அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது.
இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதில் தாக்குதலை ஈரான் தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல், பஹ்ரைன், குவைத், அபுதாபி, கத்தாரைத் தொடர்ந்து சவுதி அரேபியா தலைநகர் ரியாதிலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது ஈரான்.
இந்தத் தாக்குதலால் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கத்தார், பஹ்ரைன் நாடுகள் மக்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் போர் பதற்றம் காரணமாக கத்தார் வான்பரப்பு மூடப்பட்டதைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் தனது அனைத்து விமானச் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
