பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவும், அரசியலமைப்பை அழிக்கவும் பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஒடிஸா மாநிலம் போலங்கிரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் என்றும், நாட்டை 22 கோடீஸ்வரர்கள் தான் நாட்டை ஆள்வார்கள். இடஒதுக்கீட்டையும் ரத்து செய்துவிடுவார்கள்.
பாஜக தனது கையில் உள்ள அரசியலமைப்பு புத்தகத்தை கிழிக்க விரும்புகிறது, ஆனால், நாங்களும், இந்திய மக்களும் அதை அனுமதிக்கமாட்டோம். எனவேதான் மக்கள் ஆட்சி அமையவேண்டும் என அவர் கூறியுள்ளார்.