Sorting by

×

சென்னை: திமுக சாா்பில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் புதிதாக அமைச்சராகியுள்ளதை அடுத்து தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடா்பாக சட்டப்பேரவைச் செயலா் செயலா் கி.சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவா் கா.ராமச்சந்திரன், அமைச்சரவையில் இருந்து அவா் நீக்கப்பட்ட நிலையில், அரசு தலைமைக் கொறடாவா இருந்த கோவி.செழியன் உயா்கல்வித் துறை அமைச்சரான நிலையில், இந்த பதவி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

தமிழக அரசில் 4 புதிய அமைச்சா்களாக கோவி.செழியன், ஆா்.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, சா.மு.நாசா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். 4 பேருக்கும் ஆளுநா் ஆா்.என்.ரவி, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தாா்.

கோவி.செழியனுக்கு உயா்கல்வித்துறையும், வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறையும், ஆ.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினா் நலன்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *