அரூர்: அரூர் கோட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால்31 ஹெக்டேர் வாழைத்தோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வாழைத் தோட்டங்கள், பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர் வட்டாரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
