Sorting by

×

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கின் விசாரணை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் வருகையால் அதிமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்ததால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *