Sorting by

×

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் அருகிலுள்ள தாயார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜி.ராஜேந்திரன். இவர், திருப்பூரில் தொழில் புரிந்து வருகிறார். இவர்,கடந்த 2001-ம் ஆண்டு ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். அதனைத்தொடர்ந்து கடந்த் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். தற்போது மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார்.

போஸ்டர்

தொடர்ந்து தொகுதி முழுவதும் அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை துண்டுப்பிரசுரமாக வழங்கி வருகிறார். இந்த நிலையில், அவரது சொந்த ஊர் கிராம மக்களின் பெயரில் அச்சிடப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில்,”மக்கள் பிரதிநிதியாக சற்றும் தகுதியில்லாத, பித்தலாட்டக்காரர், பி.ஜி.ராஜேந்திரனை தோற்கடிப்போம் இவருக்கு சீட் கிடைத்தால் இவரும் இவரது மனைவியும் செய்த அட்டூழியங்களை ஆதாரத்தோடு எடுத்து வைப்போம். அவரை தோற்கடிப்போம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் ஆலங்குளம் அதிமுக வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.        

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *