நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், இமாச்சல் மாநிலத்தின் மாண்டி தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக பா.ஜ.க-வால் களம் இறக்கப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். அரசியல் பிரவேசத்துக்கு முன்பே சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் பெற்ற இவர், எம்.பி ஆனதற்கு பின்பும் அதை தொடர்ந்து வருகிறார். 2020-2021-ம் ஆண்டுகளில் நடந்த விவசாயிகள் போராட்டம் குறித்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் சிக்கிக்கொள்வதும் இவருக்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முன் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததால், கடந்த ஜூன் மாதம் சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு (CISF) பெண் வீரர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்டார். அந்த விவகாரம் இந்தியா அளவில் பேசுபொருளானது.
கங்கனா மற்றும் குல்விந்தர் கவுர்
அதைத் தொடர்ந்து, சில வாரங்கள் அமைதியாக இருந்தவர், சமீபத்தில் அவர் நடித்து வெளிவர இருக்கும் எமர்ஜென்சி திரைப்படம் குறித்து ஒரு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அப்போது, “விவசாயிகள் போராட்டத்தின் போது, மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவில் வங்காளதேசத்தில் நடந்தது போன்ற சூழலை உருவாக்கியிருப்பார்கள். அந்தப் போராட்டத்தின் போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன.” எனக் விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
ஒருகட்டத்தில், பாஜக-விடமிருந்தே, “கங்கனா தேவையற்ற விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். அவர் அமைதியாக இருந்தாலே போதும்” – என அதிருப்தி குரல்கள் எழுந்தது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் முன்னாள் எம்.பி-யும், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) தலைவருமான சிம்ரஞ்சித் சிங் மான், “பாலியல் வன்கொடுமை எப்படி நிகழ்கிறது என்பதை நீங்கள் கங்கனா ரனாவத்திடம் கேட்கலாம். அவருக்கு நிறைய அனுபவங்கள் இருக்கிறது. அதனால், பாலியல் வன்கொடுமை எப்படி நடக்கிறது என்பதை மக்களுக்கு அவரால் விளக்க முடியும்.” எனப் பேசினார். இதுவும் தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சிம்ரஞ்சித் சிங் மான்
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மகளிர் ஆணையம்,“சிம்ரஞ்சித் சிங் மானின் கருத்து ஒரு பெண்ணை அவமதிக்கும் செயல் என்பதால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம்” எனக் குறிப்பிட்டிருக்கிறது. இதற்கிடையில், நேற்று பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா கங்கனா ரனாவத்தை நேரில் வரவழைத்து சுமார் 30 நிமிடம் பேசியிருக்கிறார்.
இந்த சந்திப்புக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், “எனது வார்த்தைகளுக்காக கட்சித் தலைமையால் கண்டிக்கப்பட்டேன். அதே நேரம் கட்சியின் இறுதிக் குரல் நான்தான் என்றும் நினைக்கவில்லை. அப்படி நினைக்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. இனி என் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
கங்கனா
மேலும், சிரோமணி அகாலி தளம் தலைவரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில், “பாலியல் வன்கொடுமையை சாதாரண ஒன்றாக மாற்றுவதை இந்த நாடு ஒருபோதும் நிறுத்தாது என்றே தோன்றுகிறது. இன்று இந்த மூத்த அரசியல்வாதி பாலியல் வன்கொடுமையை சைக்கிள் ஓட்டுதலுடன் ஒப்பிடுவதில் ஆச்சரியமில்லை. ஒரு பெண் சினிமா தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி அவளை கேலி செய்வதும், பெண்களுக்கு எதிரான வன்முறையும், இந்த ஆணாதிக்க தேசத்தின் ஆன்மாவில் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
Tirupati : `இனி திருப்பதி-யில் லட்டு வாங்க, ஆதார் கட்டாயம்!’ – முக்கிய அறிவிப்பு வெளியிட்ட TTD
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
