Sorting by

×

2026 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கும் நபர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார்.

தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது. தி.மு.க-வின் இளம் வேட்பாளர் என 26 வயதான மருத்துவர் கோகிலா மணி என்பவரை திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் களமிறக்கியுள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணி சார்பில் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் களம் இறங்க உள்ள நிலையில், அவருக்குப் போட்டியாக 26 வயது இளம் அறிமுக வேட்பாளரை தி.மு.க தேர்தல் களத்தில் இறக்கியிருப்பது கவனத்தை ஈர்த்து வருகிறது. யார் இந்த கோகிலா மணி என்கிற தேடல் மேலோங்கியிருக்கிறது.

கோகிலா மணி
கோகிலா மணி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமலை கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் 26 வயதான கோகிலா மணி. திருமணம் ஆகவில்லை. அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரின் பெற்றோர் விவசாயக் கூலித் தொழிலைப் பின்புலமாகக் கொண்டவர்கள்.

எம்.பி.பி.எஸ். மருத்துவப் பட்டம் பெற்ற இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவ அனுபவம் பெற்றிருக்கிறார். கடந்த 2025-ம் ஆண்டு முதல் அவிநாசி வட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மக்கள் செயல்பாடுகள் மூலம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். இவரைத்தான் அறிமுக வேட்பாளராக தி.மு.க களம் இறக்கியிருக்கிறது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *