Sorting by

×

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்டாலின் திட்டவட்டம்

கடந்த வாரம் தனியார் ஊடகத்தின் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஸ்டாலின் ‘ ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்” என்று காங்கிரஸ் உடனான கூட்டணி தொடரும். ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்பதை தெளிவுப்படுத்தியிருந்தார்.

மாணிக்கம் தாகூர் எதிர்வினை

ஸ்டாலினின் கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை… 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்” என்று பதிவிட்டு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வந்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம்

இப்படி திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதில்…

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

நான்கு கோரிக்கைகள்

* ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும்

* கூடுதல் சட்டமன்ற தொகுதிகளை உறுதி செய்ய வேண்டும்

* வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு வழங்கப்பட வேண்டும்

* உள்ளாட்சி தேர்தல்களிலும் கணிசமான பங்கு வேண்டும் என அந்தக் கடித்தடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தக் கடிதம் தொடர்பாக காரங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை. அதேசமயம் இதனை அவர்கள் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *