ஜம்மு காஷ்மீரில் சைபர் பிரிவு போலீஸார், ஆபாசம் மற்றும் துன்புறுத்தும் வகையிலான விடியோக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த 4 பேரை கைது செய்ததாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜம்மு காஷ்மீர் சைபர் காவல் பிரிவு, இரண்டு வெவ்வேறு வழக்கில் இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சைபர் குற்றங்கள் நிகழ்வதை தடுப்பதற்கும் அகற்றுவதற்கும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரை சேர்ந்த ஷேக் முகதாஸ் ரபீக் ஒரு வழக்கிலும் மற்றொரு வழக்கில் ஜுனைத் ஹுசைன், இஃப்லாஜ் மிர் மற்றும் நவீத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் 25, சமூக வலைத்தளத்தில் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்த புகாரில் சாஹித் அஹமது தர் என்பவரை காஷ்மீர் சைபர் பிரிவு போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
