பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் அக்ஷர் படேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
4 போட்டிகளில் விளையாடி 1 மற்றும் தோல்வியடைந்துள்ள பெங்களூரு அணியும், 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்ற தில்லி அணியும் மோதுவதால், இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இரு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகமாக இருப்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு அணி
பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
தில்லி கேபிடல்ஸ் அணி
பாஃப் டு பிளெசிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், கே.எல்.ராகுல், திரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், மோஹித் சர்மா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI