இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியுடன் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இணையவுள்ளார்.
பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் அண்மையில் நியமிக்கப்பட்டார். தற்போது அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியுடன் அந்த அணியின் புதிய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் இணைவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Kirsten to join Pakistan team ahead of England series
Details here ⤵️ https://t.co/58XlD9CXcw
— PCB Media (@TheRealPCBMedia) May 14, 2024
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் வருகிற மே 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி லீட்ஸ் மைதானத்தில் வருகிற மே 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் பாகிஸ்தான் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!
கிட்டத்தட்ட அனைத்து நாட்டின் கிரிக்கெட் வாரியங்களும் டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியை இன்னும் அறிவிக்காமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
