Sorting by

×

ராஜ்ய சபா எம்.பி் தேர்தலுக்காக தி.மு.க சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர். இதில் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது பேசுபொருளாகியிருக்கும் நிலையில் அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தி.மு.க வசமுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸுக்கும், தே.மு.தி.க-வுக்கும் ஒதுக்கிய நிலையில் மீதமுள்ள இரண்டை திருச்சி சிவாவுக்கும், செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருக்கும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் கொடுத்துள்ளது தி.மு.க தலைமை.

திமுக மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின்
மு.க ஸ்டாலின்

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், “ராஜ்ய எம்.பியாக பொறுப்புவகித்த எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதில் யாருக்கும் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், கான்ஸ்டண்டைன் ரவீந்திரனுக்கும் வாய்ப்பு கிடைத்தது பலரது புருவத்தை உயர்த்த செய்திருக்கிறது.

தே.மு.தி.க-விலிருந்து விலகி 10 ஆண்டுகளாக தி.மு.க-வுக்காக மேடைகளிலும், ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்காக கட்சி எதுவும் செய்யவில்லை என்பதால் இப்போது ராஜ்ய சபா சீட் கிடைத்ததாக பேசப்படுகிறது. ஆனால், அதன் பின்னணி கதையே வேறு” என தொடர்ந்து பேசினார்கள்.

கீதா ஜீவன், கனிமொழி

“கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவர், நாகைப்பட்டினம் தொடங்கி தூத்துக்குடி, கன்னியகுமரி, திருச்செந்தூர் பகுதிகளில் மீனவ சமூக மக்கள் கணிசமாக வாழ்கின்றனர். ஆனால், சமீபத்திய சர்வேயில் மீனவ சங்கங்கள் மத்தியில் ‘எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை’ என போதாமை இருப்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் மீனவ சமூகத்தினர் வாக்குகளும் சிதறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, ராஜ்ய சபா சீட்டை மீனவ சமூகத்தை சார்ந்த ஒருவருக்கு தர வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் டேபிளுக்கு சென்றிருக்கின்றன. அமைச்சர் கீதா ஜீவன், குமரி மாவட்ட முக்கிய புள்ளிகள், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோரும் இந்த பரிந்துரைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

விஜய்யின் அரசியல் வருகை மீனவ சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே தென்மாவட்ட பிரசார களத்தில் அவர் கவனம் செலுத்துவார்” என்றனர்.

Loading…

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *