Sorting by

×

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஆனால், இப்படத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியன் – 2 கிளைமேக்ஸில் இந்தியன் – 3 பாகத்திற்கான டிரைலர் இடம்பெற உள்ளதாம்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்ற ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிறுவனர் உதயநிதி ஸ்டாலின், இந்தியன் – 3 திட்டத்தை இயக்குநர் ஷங்கர் வைத்திருப்பதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *