இந்தியா வந்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டாவ்.
அவர் டெல்லியில் தான் கலந்துகொண்ட நிகழ்வில் பேசியுள்ளதாவது…
“20 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் சீனாவிடம் செய்த அதே தவறை இந்தியாவிடம் செய்யமாட்டோம்.
அதாவது எங்களது சந்தையில் எளிதாக உள்நுழைந்து, வலுவான போட்டியாளராக மாற விடமாட்டோம்.
நாங்கள் எது செய்தாலும் அது எங்கள் மக்களுக்கு நியாயமானதாக இருப்பதாக பார்க்க்கப் போகிறோம்.

காரணம், இந்தியா எப்படி இந்திய மக்களுக்குப் பொறுப்பாக இருக்கிறதோ, அதே மாதிரி, நாங்களும் எங்களது சொந்த மக்களுக்குப் பொறுப்போடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்றால் அது அமெரிக்கா மட்டுமல்ல. இதை அடையப் பிற நாடுகளுடனும் அமெரிக்காவும் ஒத்துழைக்க வேண்டும்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்படி அமெரிக்காவை மீண்டும் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ… அதே மாதிரிதான் இந்திய பிரதமர் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், அவர்களது நாட்டைச் சிறந்தது ஆக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இந்தியா இந்த நூற்றாண்டில் நல்ல வளர்ச்சியை அடையும் என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம்.
‘ஒன்றாக இணைந்து’ பணிபுரிவது என்பது எங்களது விருப்பமாக உள்ளது. இதை இந்தியாவும் விரும்பும் என்று நினைக்கிறோம்.
இந்தியாவிடம் அனைத்துச் சக்திகளும் உள்ளது. இப்போது இந்தியா தான் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.

இங்கே பொருளாதாரம், மனிதவளம் உள்ளிட்ட பல வளங்கள் இருக்கின்றன.
இந்த நூற்றாண்டில் இந்தியா மிக முக்கியமான நாடு. அத்துடன் நாங்கள் வலுவான உறவை உருவாக்க விரும்புகிறோம்.
இந்த உறவு சமூகப் பணியோ, தொண்டோ அல்ல.
எங்களது நாட்டின் நலனுக்காகத் தான் நான் இங்கே இருக்கிறேன். இந்தியா உடன் இணக்கமாக இருப்பது எங்களது நாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.”
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
