Sorting by

×

இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி… ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன.

இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் ‘பங்காளி சண்டைகள்’.

2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது.

பிரிக்ஸ்
பிரிக்ஸ்

பிரிக்ஸ்

ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் ‘பிரிக்ஸ்’ அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் ‘பிரிக்ஸ்’ முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப்.

இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார்.

இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி.

அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன.

ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா.

> சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், ‘இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்… பகையாளிகள் அல்ல’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

> ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர்

கடந்த 10-ம் தேதி, ‘இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது… புரிந்துகொள்கிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா.

மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரி
மா சாவோக்சு – விக்ரம் மிஸ்ரி

> இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா.

இவை எல்லாமே ‘அட’ ரகம் தான். ‘இதெல்லாம் பெரிய விஷயமா?’ என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல… மிகப்பெரிய விஷயம்.

ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது.

பின்னணி என்ன?

‘இதன் பின்னணி என்ன?’ என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும்.

ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல.

இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான்.

அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா.

ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது.

ஏற்றுமதி-இறக்குமதி
ஏற்றுமதி-இறக்குமதி

இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா.

இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா – அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான்.

ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு.

மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை.

இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம்.

ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது… தவிர்க்க முடியாது.

இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை!

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *