சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய தளபதியாக பதவி வகித்து வந்த ஐ.ஜி. டோனி மைக்கேல், கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி, விசாகப்பட்டினத்தை தலைமையிடமாக கொண்ட கிழக்கு – வடகிழக்கு மண்டல கடலோர காவல் படை தளபதியாக அவர் செயல்படுவார். இதன்மூலம் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL
