Sorting by

×

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 17 – 23) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளில் திறமைகளைக் காட்டுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். விவசாயிகள் ஊடுபயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் சமூகத்துக்குத் தேவையான தொண்டுகளைப் புரிவீர்கள். கலைத் துறையினரின் மதிப்பு உயரும்.

பெண்களுக்கு கணவருடனான அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.

சந்திராஷ்டமம் – மே 23.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்கள் முயற்சிகள் தடைகளுக்குப் பின்னரே வெற்றி அடையும். திட்டங்களை ஆலோசித்தே நிறைவேற்றுவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். கடன் வாங்க மாட்டீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் நற்பெயரை எடுப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு கூடும். அரசியல்வாதிகள் எதிரிகளை வீழ்த்துவீர்கள். கலைத் துறையினர் அநாவசியமாகப் பேச வேண்டாம்.

பெண்களுக்கு சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் தோல்விகளால் கலங்க மாட்டீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சுப காரியங்கள் கை கூடும். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். தர்மக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். விவசாயிகள் அறுவடை விஷயமாக ஆழ்ந்த திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில்

செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு பணவரவில் சிறிது தாமதம் ஏற்படும்.

பெண்களுக்கு உடல் நலத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மாணவர்கள் சக மாணவர்களிடம் பிரச்னைகளைத் தவிர்ப்பீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உடனிருப்போருடன் நல்ல புரிதல் உண்டாகும். சூழ்நிலைகளால் சிக்கியிருந்தவர்கள் விடுபடுவீர்கள். காரியங்களை உத்வேகத்துடன் முடிப்பீர்கள். தொழிலைச் சீராக நடத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வியாபாரிகள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்களுக்கு உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள். தொழிலில் கவனமாக ஈடுபடுவீர்கள். ஆதரவற்றோருக்கு உதவுவீர்கள். சமூகத்தில் நற்பெயரை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பளிச்சிடும். வியாபாரிகள் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். விவசாயிகள் விவசாய உபகரணங்களைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத் துறையினர் புகழால் மகிழ்வீர்கள்.

பெண்களின் உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சாதனைகளை நிகழ்த்துவீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வழக்குகள் சாதகமாகும். கலைத் துறையினர் மனம் தளராமல் பணிகளை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகளை பெற்றோர் நிறைவேற்றுவார்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வருமானம் உயரும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். உங்களுக்குக் கீழ்பணிபுரிவோர் உங்கள் பேச்சை கேட்பார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் இருந்த சிக்கல்கள் மறையும்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். கலைத் துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.

பெண்கள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையைக் கூட்டிக் கொண்டு செயலாற்றுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழில் லாபமாக நடக்கும். கடமையில் கண்ணாக இருப்பீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். பெரியோர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்துவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் எதிர்பார்த்தபடி அமையும். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணம் வந்து சேரும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. வியாபாரிகள் வாகனங்களுக்கு பழுது பார்க்க நேரிடும். விவசாயிகளுக்கு கொடுக்கல் – வாங்கல் சாதகமாக இருக்கும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் பேசவும். கலைத் துறையினருக்கு கைநழுவிய ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் இல்லத்தில் மழலை பாக்கியம் உண்டாகக் காண்பீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் – இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியமும் மனவளமும் சிறக்கும். தன்னம்பிக்கையும் தனித் திறமையும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தினரின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி, விற்பீர்கள். விவசாயிகள் கால்நடை தீவனங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் பயணம் செய்ய நேரிடும்.

பெண்களுக்கு குடும்பத்தில் அந்தஸ்து உயரும். மாணவர்கள் பெற்றோரை அரவணைத்துச் செல்வீர்கள்.

சந்திராஷ்டமம் – மே 17.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் உயர்நிலையை எட்டுவீர்கள். பணவரவும் பாராட்டும் உண்டு. உடல்நிலையில் முன்னேற்றம் உண்டு. குழந்தைகள் வழியில் கடமைகளை நிறைவேற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரிகள் நன்மைகளைக் காண்பீர்கள். விவசாயிகள் கால்நடைகளை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் கடமைகளை அமைதியாகச் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல அனுகூலம் உண்டு.

பெண்களுக்கு கணவரின் ஆதரவு அதிகரிக்கும். மாணவர்கள் பிறரிடம் ஒற்றுமையாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் – மே 18, 19, 20.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் இருக்காது. உடன் பிறந்தோர் உதவிகளைச் செய்வீர்கள். கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறை

வேற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு அந்தஸ்து உயரும். மாணவர்கள் ஆசிரியர்களின் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் – மே 21, 22.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *