ஏ.ஐ இப்போது உலக அரசாங்கங்களின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்து விட்டது. இதில் அமெரிக்கா மட்டும் விதிவிலக்கல்ல.
அமெரிக்காவின் அரசாங்க துறைகளில் பெரும்பாலும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ (Anthropic) பயன்படுத்தப்படுகிறது.
பாதுகாப்புத் துறையில் ஏ.ஐ பயன்படுத்துவதன் சம்பந்தமாகத் தான் தற்போது அமெரிக்க அரசாங்கத்திற்கும், ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கும் பிரச்னை எழுந்துள்ளது.

காரணம்…
ராணுவத்தின் அனைத்து செயல்பாட்டிற்கும் ஆந்த்ரோபிக் ஏ.ஐ பயன்பாட்டைக் கேட்டுள்ளது அமெரிக்க அரசு.
ஆனால், அமெரிக்க குடிமக்களை கண்காணிப்பதற்கும், மனித உதவியில்லாமல் டார்க்கெட்டை நிர்ணயித்து கொல்லும் ‘கில்லர் ரோபோட்டுகளில்’ ஏஐ பயன்படுத்துவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.
‘மிகப்பெரிய ராணுவ வேலைகளில் ஏஐயை ஈடுபடுத்தும் அளவிற்கு, அது இன்னும் நம்பகமாக உருமாறவில்லை’ என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் காரணம் கூறுகிறது.
ட்ரம்ப் உத்தரவு
ஆனால், இது அமெரிக்க நிர்வாகத்திற்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அனைத்து ஃபெடரல் நிறுவனங்களும் விரைவில் ஆந்த்ரோபிக் ஏஐ பயன்படுத்துவதில் இருந்து வெளியேற வேண்டும்” என்று ஆறு மாதக் கெடு கொடுத்திருக்கிறார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
