ஈரான் போர்… ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.
ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.
ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…
“ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்… ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதாவது.
ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
