நேற்று அமெரிக்காவின் F-15E ஸ்ட்ரைக் ஈகளை தாக்கி வீழ்த்தியிருந்தது ஈரான் ராணுவம்.
அந்த விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் நேற்றே மீட்கப்பட்டார்.
இன்னொருவரை தேடும் பணி நடந்துகொண்டிருந்தது.
அவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
“அவரைக் கண்டுபிடித்துவிட்டோம்! என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களாக, அமெரிக்க ராணுவம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

இது நமது அற்புதமான அதிகாரிகளில் ஒருவருக்காக மேற்கொள்ளப்பட்டது ஆகும். அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னல். அவர் இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
எங்கே இருந்தார்?
இந்த வீரமிக்க போர்வீரர், ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் எதிரிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தார். ஒவ்வொரு மணி நேரமும் நமது எதிரிகள் அவரை நெருங்கி கொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம், அமெரிக்க தலைமைத் தளபதி, போர்ச் செயலாளர், கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் மற்றும் சக போர் வீரர்கள் என 24 மணி நேரமும் அவரது இருப்பிடத்தைக் கண்காணித்து, அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.
இந்த முயற்சி குழைந்து விடக்கூடாது என்று தான், நேற்று இதை பற்றி தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஈரானில் நாம்!
அமெரிக்க ராணுவ வரலாற்றில், எதிரிப் பிரதேசத்தின் ஆழத்தில் இரண்டு அமெரிக்க விமானிகள் தனித்தனியாக மீட்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நாங்கள் ஒரு அமெரிக்கப் போர் வீரரை ஒருபோதும் கைவிட மாட்டோம்! இந்த இரண்டு நடவடிக்கைகளும், ஒரு அமெரிக்கர் கூட கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ நம்மால் வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்பது, ஈரானிய வான்வெளியில் நாம் மிகப்பெரிய வான் ஆதிக்கத்தையும் மேன்மையையும் அடைந்துவிட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.
இது குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பிற அனைத்து அமெரிக்கர்களும் பெருமைப்பட வேண்டிய மற்றும் ஒன்றுபட வேண்டிய ஒரு தருணம்.
உலக வரலாற்றிலேயே மிகச் சிறந்த, மிகவும் தொழில்முறை வாய்ந்த மற்றும் சிறந்த ராணுவத்தை நாம் உண்மையிலேயே கொண்டுள்ளோம்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
