Sorting by

×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை எவ்வித மாற்றமுமின்றி பவுன் ரூ.53,720-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் புதன்கிழமை பவுனுக்கு ரூ.168 உயா்ந்து ரூ.53,720-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.6,715-க்கும், பவுன் ரூ.53,720-க்கும் விற்பனையானது.

கோவையில் அனுமதியின்றி பிரியாணி போட்டி: உணவக மேலாளர் மீது வழக்குப் பதிவு

அதேபோல் வெள்ளி விலையில் கடந்த 2 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.93.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.93,500-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கம் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,720-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,705-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளி விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.93-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.93,000-க்கும் விற்பனையாகிறது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *