Sorting by

×

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் ஈரானின் மீதான தாக்குதல் தீவிரம் அடையும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், `ஈரானின் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புகளை அழிக்கும் பணியை அமெரிக்க ராணுவம் இன்னும் தொடங்கவே இல்லை. உலகிலேயே மிகச்சிறந்ததும், மிகவும் சக்திவாய்ந்ததுமான நமது ராணுவம், ஈரானில் எஞ்சியிருப்பவற்றை அழிக்கும் பணியை இன்னும் தொடங்கவே இல்லை. இப்போது பாலங்கள், அடுத்து மின் நிலையங்கள் தாக்கப்படும்.

புதிய ஆட்சியின் தலைமைக்கு, என்ன செய்யவேண்டும் என்பதும், அதுவும் மிக விரைவாகவே செய்யப்பட வேண்டும் என்பதும் எமக்குகு தெரியும்” என்று அவர் எச்சரித்தார்.

தாக்குதலுக்கு உள்ளான பாலம்

அதோடு சுராஜ் நகரில் அமெரிக்க படை தாக்கி அழித்த மேம்பாலத்தின் வீடியோவையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். ஈரான் தாமதம் இன்றி உடன்பாட்டிற்கு வரவில்லையெனில் இது போன்று மேலும் தாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு மேற்கே அமைந்துள்ள, ஒரு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டமான கராஜ் நகரின் மிகப்பெரிய மேம்பாலத்தை அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் சேதப்படுத்தியது. இத்தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கராஜ் வடக்கு புறவழிச்சாலையின் முக்கிய அங்கமாகத் திகழும் இந்தப் பாலம், இப்போதும் கட்டுமான நிலையில் இருந்தது.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானை, மேற்கே அமைந்துள்ள கராஜ் நகரத்துடன் இணைப்பதே இதன் நோக்கமாகும். 136 மீட்டர் உயரமுள்ள இந்த பாலம் மத்திய கிழக்கின் மிகவும் உயரமானது ஆகும். பாலத்தை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், “முடிக்கப்படாத பாலங்கள் உள்ளிட்ட பொதுமக்களின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, ஈரானியர்களைச் சரணடையச் செய்யாது. அது, சீர்குலைந்த ஒரு எதிரியின் தோல்வியையும் தார்மீக வீழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்துகிறது,” என்று கூறினார்.

அமெரிக்கா நடத்தி இருக்கும் இத்தாக்குதலை தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகளில் உள்ள பாலங்களை தாக்க முடிவு செய்துள்ளது. பதிலுக்குப் பதில் என்ற பதிலடியைக் குறிக்கும் வகையில், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள எட்டு முக்கிய பாலங்களின் பட்டியலை ஈரான் வெளியிட்டுள்ளது.

8 பாலங்களுக்கு ஈரான் குறி

ஈரானியப் பட்டியலில் குவைத்தில் உள்ள ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள ஷேக் சயத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம், சவுதி அரேபியாவை பஹ்ரைனுடன் இணைக்கும் கிங் ஃபஹத் இணைப்புப் பாலம், அத்துடன் ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்தூன் பாலம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.

வரும் நாட்களில் ஈரான் மத்திய கிழக்கில் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தும் என்பதால் பாலங்கள் இருக்கும் பகுதியில் வான்பாதுகாப்பை மத்திய கிழக்கு நாடுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *