Sorting by

×

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

சனிக்கிழமை (19.04.2025)

மேஷம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சந்திரன் – களத்திர ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. நீங்கள் அறிவை மட்டுமே மூலதனமாக நம்புவீர்கள். மாதம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:

கிரகநிலை:

குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – தைரிய ஸ்தானத்தில் சந்திரன் – ரண, ருண ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:

கிரகநிலை:

ராசியில் ராஹூ – குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த டென்ஷன் குறைந்து சந்தோஷமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான உறவு நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

கிரகநிலை:

ராசியில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – ரண, ருண ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். பெண்கள் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்:

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – சுக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி , கேது – லாப ஸ்தானத்தில் ராஹூ – அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

கன்னி:

கிரகநிலை:

தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் புதன், செவ்வாய் – தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி , கேது – தொழில் ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அனாவசியமாக யாரிடமும் பேச வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்:

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், புதன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் குரு, சனி , கேது – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்:

கிரகநிலை:

ராசியில் சூர்யன், சுக்ரன் – தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி , கேது – அஷ்டம ஸ்தானத்தில் ராஹு- பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் – புதன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:

கிரகநிலை:

ராசியில் குரு, சனி , கேது – களத்திர ஸ்தானத்தில் ராஹு – அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். எடுத்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்:

கிரகநிலை:

ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சந்திரன் – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று ஆக்க பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். புத்தி சாதுர்யத்தால் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். பிள்ளைகளை தட்டி கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உறவினர் நண்பர்களிடம் டென்ஷன் இல்லாமல் போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3, 6

கும்பம்:

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் , குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

மீனம்:

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ – பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி , கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:

இன்று வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். வெற்றிக்காக பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 5, 9

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *