Sorting by

×

எரிசக்தி வளம் மிக்க இரானின் தெற்கு கடற்கரையின், ஓமன் வளைகுடாவில் சபஹர் துறைமுகம் இருக்கிறது. கடல்வழி, தரைவழி, ரயில் வழி எனச் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கு இந்தியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான நுழைவாயிலாக சபஹர் துறைமுகம் விளங்குகிறது.

துறைமுகம்

இந்த துறைமுகத்தை 2018-ம் ஆண்டு முதல் இந்தியா குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகிறது. இந்த குத்தகை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு கையெழுத்தாகும். இந்த நிலையில், சபஹர் துறைமுகத்தை இந்தியா தொடர்ந்து 10 ஆண்டுகள் நிர்வகிக்க ஒப்பந்தமிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இரானின் தெஹ்ரானில் இந்திய போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) – இரானின் போர்ட் & கடல்சார் அமைப்பு (PMO) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது.

மேலும், இந்தியாவின் கூடுதல் நிதியுதவியுடன் துறைமுகத்தைச் சீர்படுத்துவதிலும், இயக்குவதிலும் IPGL கணிசமான முதலீட்டைச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம், “சபஹர் துறைமுக ஒப்பந்தம் மற்றும் இரானுடனான இருதரப்பு உறவுகள் விஷயத்தில், இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கைகளைத் தெரிவிக்கும்படி கேட்போம். இரான் மீதான அமெரிக்கத் தடைகள் நடைமுறையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்.

தெஹ்ரானில் IPGL

இரானுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், அரசாக இருந்தாலும், அது இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்குச் சாத்தியம் இருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இதை நாங்கள் பல நிகழ்வுகளில் கூறியிருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

`இந்திய பொதுத் தேர்தலில் நாங்கள் தலையிடுகிறோமா?’ – ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா பதில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *