உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடுவதற்கு வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “1982-ல் ரிச்சர்ட் அட்டன்பர்க்கின் காந்தி குறித்த படம் வந்த பிறகுதான் முதல்முறையாக காந்தி பற்றி ஆர்வம் எழுந்தது. அந்தப் படம் எடுக்காமல் இருந்திருந்தால் மகாத்மா காந்தியைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காது.” எனத் தெரிவித்திருந்தார்.
திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!
பிரதமர் மோடியில் இந்த கருத்தை விமர்சித்து ராகுல் காந்தி விடியோ ஒன்றை வியாழக்கிழமை காலை வெளியிட்டுள்ளார்.
அதில், “உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி. உண்மை மற்றும் அகிம்சையின் வடிவில், அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்கும் பலவீனமான மனிதனுக்கும் தைரியத்தைத் தரும் பாதையை உலகுக்குக் காட்டியவர். அவருக்கு சான்றிதழ் தேவையில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
महात्मा गांधी वो सूर्य हैं जिसने पूरे विश्व को अंधेरों से लड़ने की ताकत दी।
सत्य और अहिंसा के रूप में बापू ने दुनिया को ऐसा मार्ग दिखाया, जो कमज़ोर से कमज़ोर व्यक्ति को भी अन्याय के खिलाफ खड़े होने का साहस देता है।
उन्हें किसी ‘शाखा शिक्षित’ के प्रमाणपत्र की ज़रूरत नहीं है। pic.twitter.com/OK4aRtunKB
— Rahul Gandhi (@RahulGandhi) May 29, 2024
முன்னதாக புதன்கிழமை மாலை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
