மக்களவையின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 58.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் இறுதிக்கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 58.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 5 மணி நிலவரப்படி 58.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக ஜார்க்கண்டில் 67.95 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பிகாரில் 48.86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலில்,
பிகார் – 48.86 சதவீதம்
சண்டீகர் – 62.80 சதவீதம்
ஹிமாச்சல் பிரதேசம் – 66.56 சதவீதம்
ஜார்க்கண்ட் – 67.95 சதவீதம்
ஒடிசா – 62.46 சதவீதம்
பஞ்சாப் 55.20 சதவீதம்
உத்தரப் பிரதேசம் 54 சதவீதம்
மேற்குவங்கம் 69.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
