தவெகவின் ‘ஒரே’ கூட்டணி கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் கட்சி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என ஒரு செய்தியை அக்கட்சியின் தலைவர் முஸ்தபாவின் விளக்கத்தோடு வெளியிட்டிருந்தோம். செய்தி வெளியானவுடன் அவர் மேலும் அதுசார்ந்து விளக்கம் அளிக்க விரும்புவதாக நம்மை தொடர்புகொண்டார்.

முஸ்தபா கூறியதாவது, ‘அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் சட்டமன்றத்துக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விருப்பம். ஆவடி நாசர், ஆளுர் ஷாநவாஸ் என இஸ்லாமியர்களுக்கு எதிராகவே எங்கள் கட்சி ஆட்களை நிறுத்தி, ஒரு இஸ்லாமியரும் இன்னொரு இஸ்லாமியரும் மோதிக்கொள்ளும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. இஸ்லாமியர்களுக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என நினைக்கிறோம்.
எந்த இஸ்லாமிய அமைப்பிலிருந்தும் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் சென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே. இஸ்லாமியர்கள் கணிசமாக இருந்தும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்காத கடையநல்லூர், பாபநாசம் போன்ற தொகுதிகளில் எங்களுக்கு வாய்ப்பு கேட்கிறோம். இஸ்லாமியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை. அதை முதலில் கட்சிக்குள் இருந்து அமல்படுத்துங்கள் என தவெகவிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

23 எம்.எல்.ஏக்கள் இடங்களை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க சொல்கிறோம். இதுதான் எங்களின் கொள்கை. இதன்படியே நாங்கள் செயல்பட விரும்புகிறோம். தவெக கூட்டணி பேச குழு அமைக்கும் போது இதையெல்லாம் பேசி முடிவெடுப்போம்’ என்றார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN
